உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ்சிற்கு காத்திருந்தவரிடம் மொபைல் போன் பறிப்பு

பஸ்சிற்கு காத்திருந்தவரிடம் மொபைல் போன் பறிப்பு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் பஸ்சிற்கு காத்திருந்த வாலிபரிடம் மொபைல் போன் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த பழைய ஒரத்துார் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் விக்ரம், 24. இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், சேத்தியாத்தோப்ப ராஜீவ் சிலை அருகே பஸ் நிறுத்த நிழற்குடையில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்க வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், விக்ரமிடமிருந்து மொபைல்போனை பறித்து சென்றனர்.இதுகுறித்து புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ