உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாய்மொழி நாள் விழா

தாய்மொழி நாள் விழா

கடலுார்: கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில் தமிழ்த்துறை மற்றும் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் சபீனாபானு தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் மகாலட்சுமி வரவேற்றார். பாரதிதாசன் இலக்கிய மன்ற செயலாளர் கலைச்செல்வி வாழ்த்துரை வழங்கினார். மன்ற தலைவர் நாகராஜன் சிறப்புரையாற்றினார். இதில், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை இறுதியாண்டு மாணவி காமாட்சி தொகுத்து வழங்கினார். உதவி பேராசிரியை மகாலட்சுமி ஒருங்கிணைத்தார்.சினேகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை