மேலும் செய்திகள்
செடிகளால் உறுதி இழக்கும் அமைந்தகரை கூவம் பாலம்
24-Oct-2024
கடலுார்: கடலுார் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்று பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் செடிகள் வளர்வதால் பாலம் உறுதித்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது.கடலுார் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது.பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டு பகுதியில் ஆங்காங்கே செடிகள் வளர்ந்துள்ளது. ஏற்கனவே பாலத்தில் இருபுறமும் தடுப்பு கட்டையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு பாலம் வலுவிழந்து காணப்படுகிறது.தற்போது, செடிகள் வளர்வதால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் பாலம் உறுதி தன்மையை இழந்து மேலும் வலுவிழக்கும் அபாயம் உள்ளது. ஜவான்ஸ்பவன் வழியாக கம்மியம்பேட்டை பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதால் அதிர்வு ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.எனவே, பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தடுப்பு கட்டைகளை சீரமைக்கவும், செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
24-Oct-2024