உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சென்டர் மீடியனில் மின்விளக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை 

 சென்டர் மீடியனில் மின்விளக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை 

பெண்ணாடம்: ரயில்வே மேம்பாலத்தின் இறையூர் சென்டர் மீடியனில் விபத்துகளை தடுக்க ைஹமாஸ் விளக்கு அமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தாசலம் - ராமநத்தம் (தொழுதுார்) நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக தினசரி பஸ், லாரி, கனரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் செல்கின்றன. மேம்பாலத்தின் இறையூர் பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. ஆனால் மின்விளக்கு வசதிகள் இல்லை. இதனால் இவ்வழியே இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் இருசக்கரம் மற்றும் கனரக வாகன ஓட்டிகள் சென்டர் மீடியன் தெரியாமல் மோதி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், பைக்குகளில் வருவோர்களும் சென்டர் மீடியனில் மோதி உயிரிழப்பது தொடர்கிறது. எனவே, இறையூர் ரயில்வே மேம்பால சென்டர் மீடியனில் ைஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை