உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மா.கம்யூ., குழுவினர் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மா.கம்யூ., குழுவினர் ஆய்வு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், கன மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மா.கம்யூ., குழுவினர் ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சின்னகுமட்டி, கொத்தட்டை, தச்சக்காடு உள்ளிட்ட கிராமங்களை மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமையில், ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றியக்குழு உறுப்பினார்கள் குளஞ்சியப்பன், தனசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு பணியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை