உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேலையில் தீப்பிடித்து முதாட்டி பலி

சேலையில் தீப்பிடித்து முதாட்டி பலி

பண்ருட்டி : பண்ருட்டி அருகே சேலையில் தீப்பிடித்து முதாட்டி இறந்தார்.பண்ருட்டி அடுத்த சொரத்துார் , சொரத்தங்குழி வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி சின்னபொண்ணு,65; இவர் கடந்த 17 ம்தேதி மாலை தனது மகன் தனவேல் வீட்டில் இருந்த குப்பைகளை கூட்டி தீயிட்டு கொளுத்தினார்.அப்போது அவரது சேலையில் தீப்பற்றியது.தீ மள மளவென உடல் முழுவதும் பரவியது. உடனடியாக அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை