உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா

முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில், 97ம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 7ம் தேதி காலை அம்மனுக்கு மகா அபிேஷகம், மாலை 5:00 மணிக்கு சக்தி கரகம் கொண்டு வருதல், 8ம் தேதி காலை 6:00 மணிக்குள் கொடியேற்றுதல், மாலை அம்மன் வீதியுலா நடந்தது.விழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள், மகா தீபாராதனை நடந்து வந்தது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று, காலை 7:00 மணி முதல் 9:00 மணிக்குள் சக்தி கரகம் கொண்டு வருதல், பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு செடல் உற்சவம் மற்றும் தேர் வீதியுலா நடந்தது.முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இன்று 17ம் தேதி காலை மஞ்சள் நீர் உற்சவம் மற்றும் இரவு மடிபால் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ