உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய மல்லர் கம்பம் போட்டி கடலுார் மாணவர்கள் 2 பேர் தேர்வு

தேசிய மல்லர் கம்பம் போட்டி கடலுார் மாணவர்கள் 2 பேர் தேர்வு

கடலுார்: கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏர்வாய்பட்டினம் விவேகானந்தா பள்ளியில், தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டிக்கு தமிழக அணி வீரர்கள் தேர்வு நடந்தது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, கடலுார் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 14, 17, 19 வயதிற்குட்பட்டோருக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 4பேர் வீதம் 24பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1மாணவர் யஷ்வந்த் (17வயதிற்குட்பட்டோர் பிரிவு), திருவதிகை அரசு உயர்நிலைப்பள்ளி 9ம்வகுப்பு மாணவர் நந்தகுமார் (14வயதிற்குட்பட்டோர் பிரிவு) ஆகியோர் தேர்வு பெற்றனர்.தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை, கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் கடலுார் மாவட்ட மல்லர் கம்ப கழக தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் அசோகன், செயலாளர் கார்த்திக், பொருளாளர் மணிபாலன், இணை செயலாளர் பாபு, பயிற்றுநர்கள் கோபிநாத், புருஷோத்தமன், கிரிஜா வாழ்த்தினர். தேர்வான வீரர்கள் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் நடைபெற உள்ள போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை