உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாவட்டத்தில் இன்று நீட் தேர்வு: 4,560 பேர் பங்கேற்பு

கடலுார் மாவட்டத்தில் இன்று நீட் தேர்வு: 4,560 பேர் பங்கேற்பு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், இன்று நடக்கும் நீட் தேர்வை 4,560 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.கடலுார் மாவட்டத்தில், இன்று (4ம் தேதி) நீட் தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்க கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 4,560 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 720 பேர், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 480, குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி.,மேல்நிலைப் பள்ளியில் 480, நெய்வேலி என்.எல்.சி.,கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 600, பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில் 480, நெய்வேலி வட்டம் 10 என்.எல்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480, நெய்வேலி வட்டம் 11 என்.எல்.சி.,பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 720, கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரியில் 600 பேர் என மொத்தம் 4,560 மாணவர்கள் 8 மைங்களில் தேர்வு எழுதுகின்றனர்.இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தடையில்லாத இணைய வசதி மற்றும் அடிப்படை வசதி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி