உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கனமழையால் நெல் பயிர் சேதம் நெல்லிக்குப்பம் விவசாயிகள் கவலை

கனமழையால் நெல் பயிர் சேதம் நெல்லிக்குப்பம் விவசாயிகள் கவலை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக பல வீடுகளில் 'டிவி' உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் சேதமானது. இரவு 11:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை 2 மணி நேரத்தில் 8 செ.மீ., கனமழை பெய்தது. இதனால் வான்பாக்கம் செல்லும் சாலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் செடிகள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பகண்டையை சேர்ந்த ராஜா என்பவர் கரும்பு அறுவடை செய்திருந்தார். இரண்டு நாட்களில் ஆலையில் கரும்பு அரவை பணி துவங்க உள்ள நிலையில், மழைநீர் தேங்கியதால் அவர், தனது வயலில் இருந்த கரும்பை டிராக்டர் பெட்டிகளில் ஏற்றி 6 இனிஜின்கள் மூலம் இழுத்து வெளியே கொண்டு வந்தார். இதனால் செலவு அதிகமானதோடு வயலும் சேதமானது. நகராட்சி 9வது வார்டு ராமு தெருவில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஆமை வேகத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. அண்ணாமலை தெரு வீடுகளின் கழிவுநீர் ராமு தெரு கால்வாய்க்கு செல்ல வேண்டும். அங்கு கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணிகள் நடப்பதால் அண்ணாமலை தெரு கழிவுநீர் செல்வதை அடைத்துள்ளனர். கனமழையால் தண்ணீர் செல்ல முடியாமல் அண்ணாமலை தெருவில் உள்ள 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை