உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதியவரிடம் நகை பறித்த மூவருக்கு வலை

முதியவரிடம் நகை பறித்த மூவருக்கு வலை

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே கீழே விழுந்த முதியவரை துாக்குவதுபோல் நடித்து நகையை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கஞ்சனுாரை சேர்ந்தவர் நாகப்பன், 64; இவர் நேற்று முன்தினம் இரவு கடலுார் கூத்தப்பாக்கத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை பாலத்தில் சென்றபோது நாகப்பன் தடுமாறி விழுந்தார்.பைக்கில் வந்த 3 நபர்கள், கீழே விழுந்த நாகப்பனை துாக்கி விடுவது போல் உதவி செய்து, நாகப்பன் கையில் போட்டிருந்த ஒன்றரை சவரன் கை செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து பண்ருட்டி போலீசில் நாகப்பன் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி