மேலும் செய்திகள்
கோண்டூரில் சாலை பணி எம்.எல்.ஏ., அடிக்கல்
28-Aug-2024
கடலுார்: கடலுாரில் புதிய தார் சாலை பணியை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.தமிழக முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோண்டூர் ஊராட்சியில் சித்துார் சாலை முதல் மாசிலாமணி நகர் வரை ரூ. 59.84 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் உண்ணாமலைசெட்டிச்சாவடி முதல் நத்தப்பட்டு வரை ரூ. 85.73 லட்சம் மதிப்பில் தார் சாலைப் பணி ஆகியவற்றுக்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பி.டி.ஓ.,க்கள் வீரமணி, பார்த்திபன் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர்கள் பாலாஜி, விஜயா ராஜேந்திரன், துணைத் தலைவர்கள் சாந்தி பழனிவேல், ஜோதி பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் சுபாஷினி சீனிவாசன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சுதாகர் மாயவன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவிராஜ், ஜோதி, ரவி, ராஜன் பங்கேற்றனர்.
28-Aug-2024