என்.எல்.சி., டிரைவர் தற்கொலை
புவனகிரி: புவனகிரி அடுத்த குமுடிமூலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பாண்டியன் மகன் சுதாகர்,33; இவர் என்.எல்.சி., யில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை செய்து வந்தார். சுதாகர் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருப்பதை மனைவி சுகுணா கண்டித்து வந்தார். நேற்று முன்தினம் சுதாகர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்தார். இதில் மனமுடைந்த அவர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். உடன் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.