என்.எல்.சி., ஊழியர் தற்கொலை
நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25, ஐ சேர்ந்தவர் வெங்கடேசன். 58; இவர் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25ல் உள்ள என்.எல்.சி., விருந்தினர் இல்லத்தில் சீனியர் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார். இவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்தவர், கடந்த இரு தினங்களுக்கு முன், அவரது இல்லத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் சாய் கணேஷ். 31; கொடுத்த புகாரின் பேரில் டவுன்ஷிப் போலீசார் விசாரிக்கின்றனர்.