உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  என்.எல்.சி., செயலாக்க துறை இயக்குனர் பொறுப்பேற்பு

 என்.எல்.சி., செயலாக்க துறை இயக்குனர் பொறுப்பேற்பு

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துறையின் புதிய இயக்குனர் பொறுப்பேற்றுக் கொண்டார். என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துறையின் புதிய இயக்குநராக ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா நெய்வேலி தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் செயல் இயக்குநராக பணியாற்றி, அங்குள்ள பல்வேறு முக்கியத் தொழில்நுட்பப் பிரிவுகளுக்கும் தலைமை தாங்கியுள்ளார். இவரை, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி வாழ்த்தி பேசுகையில், 'முக்கிய பொறியியல் துறைகள் சார்ந்த அவரது அனுபவம், உத்திசார்ந்த நுண்ணறிவு ஆகியவற்றுடன், திட்டமிடல் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநராக மிகவும் சிறப்பாக செயல்படுவார். என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப, நீண்ட கால உத்திசார்ந்த திட்டங்களை உருவாக்குதல், திட்டத் தொகுப்புகளை நிர்வகித்தல் மற்றும் வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்' என்றார். என்.எல்.சி., இயக்குனர்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீர் ஸ்வரூப், வெங்கடாசலம், பிரசன்னகுமார் ஆச்சார்யா மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி