உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புயல் பாதித்த மக்களுக்கு என்.எல்.சி., நிவாரண உதவி

புயல் பாதித்த மக்களுக்கு என்.எல்.சி., நிவாரண உதவி

நெய்வேலி; கடலுாரில் பெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை என்.எல்.சி., சேர்மன் பார்வையிட்டு, நிவாரண உதவிகள் வழங்கினார்.கடலுாரில், பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி நேரில் சென்று பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார்.குடியிருப்புகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்று் பணியில் 12 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தொழில நுட்ப உதவிகளைத் தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த நான்கு நாட்களில் 37 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் 2 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களையும் என்.எல்.சி., வழங்கியுள்ளது. மேலும், இயற்கை பேரிடரில் பாதித்த மக்களுக்கு தேவையான உதவிகளை என்.எல்.சி., தொடர்ந்து வழங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை