வடக்கு ஒன்றிய தி.மு.க, நலத்திட்ட உதவி வழங்கல்
விருத்தாசலம்; முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா, தி.மு.க., வடக்கு ஒன்றியம் மற்றும் இளைஞரணி சார்பில், விருத்தாசலம் ஒன்றிய கட்சி அலுவலகத்தில் நடந்தது.ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் கருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர்கள் தர்ம மணிவேல், அன்பழகி ராஜேந்திரன், கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய பொருளாளர் சாமி, மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், பாலகிருஷ்ணன், சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், துணை அமைப்பாளர்கள் பாலபாரதி, வீரபாண்டியன், சுபாஷ், வாஞ்சிநாதன், கிளை செயலர்கள் தங்கதுரை, விஜயன், குணசேகரன், ஜெயராமன், விசுவநாதன், வீரசெல்வம், சங்கர், செந்தில்குமார், அருளரசன், மணிகண்டன், முருகன், மாணவரணி ராஜிவ்காந்தி, வெங்கடேசன், இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம், குமார், தயாநிதி பங்கேற்றனர்.தொடர்ந்து, கொடுக்கூர், மு.பட்டி கிராமங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பும், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவியும் வழங்கினர். கொளஞ்சியப்பர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.