உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் புதுப்பிக்க அறிவிப்பு

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் புதுப்பிக்க அறிவிப்பு

கடலுார் : பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் புதுப்பித்துக்கொள்ள வரும் 9 ம் தேதி கடலுாரில் முகாம் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பஸ்களில் மாவட்டம் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய, மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் பாஸ் புதுபிக்கப்படுகிறது. 2024---2025ம் நிதியாண்டிற்கு இலவச பஸ் பாசை புதுபிக்கும் முகாம் வரும் 9ம் தேதி, கடலுார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கிறது.கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், முகாமில் பங்கேற்று, புதுப்பித்துக்கொள்ளலாம். தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல் மார்பளவு புகைப்படம்-4, ஆதார் அடையாள அட்டை நகல் மற்றும் இலவச பஸ் பாஸ் அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவைகளுடன் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ