உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமுளை ஊராட்சியில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

சிறுமுளை ஊராட்சியில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

திட்டக்குடி : திட்டக்குடி அரசுக்கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், சிறுமுளை ஊராட்சியில் துவங்கியது.நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் வரவேற்றார். சிறுமுளை ஊராட்சிதலைவர் சாந்திகுஞ்சுதபாதம், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சரஸ்வதி குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். இரண்டாம்நாள் பள்ளிக்கூட வளாகம், சிவன்கோவில் வளாகம் உள்ளிட்டவைகளை துாய்மை படுத்தும் பணி நடந்தது.மூன்றாம்நாளான நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சரஸ்வதி முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பசுமைத்துாண்கள் அறிவழகன், கவுரவ விரிவுரையாளர் வீரபாண்டியன் மற்றும் வார்டுஉறுப்பினர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், கிராம முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்