அரசு கலைக்கல்லுாரியில் நுால் வெளியீட்டு விழா
கடலுார் : கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரியில், மாற்றுத்திறனாளிகள் நல அலகு சார்பில் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் வினையாலணையும் பெயர்கள் நுால் வெளியீட்டு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ராஜா வரவேற்றார். துறை தலைவர்கள் கா.கீதா, பா.கீதா முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கவிதை உறவு நிறுவனர் ராதாகிருஷ்ணன் நுாலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நுால் முதல் பதிப்பை புதுடில்லியை சேர்ந்த பிரம்மநாயகம் பெற்றுக்கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் தமிழ் இயலன் ஏற்புரையாற்றினார். அப்போது, துறை தலைவர்கள் ராமகிருஷ்ணன் சாந்தி, நிர்மல் குமார், சிவகாமசுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை இணை பேராசிரியர் வேணி நன்றி கூறினார்.