உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

கடலுார் : கடலூர் குண்டுஉப்பலவாடி பகுதியை சேர்ந்தவர் திருஞானம் 60; இவர் நேற்று காலை கடலூர் புதிய கலெக்டர் அலுவலக சாலையில் பைக்கில் சென்றார். எதிர்பாராதவிதமாக பைக் சாலை நடுவில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி சாலையில் விழுந்தார். அப்போது கடலுாரில் இருந்து புதுச்சேரி சென்ற தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த திருஞானம் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை விபத்தால் புதிய கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதித்தது. கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ