உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி காயம்

காஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி காயம்

ராமநத்தம்: ராமநத்தம் அருகே வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் மூதாட்டி காயமடைந்தார். ராமநத்தம் அடுத்த தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மனைவி பெருமாயி, 60; துாய்மை பணியாளர். நேற்று பகல் 1:15 மணியளவில் தனது வீட்டில் சமையல் செய்வதற்கு, சிலிண்டரை ஆன் செய்தபோது,காஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததில் பெருமாயி காயமடைந்தார். இந்த விபத்தில், வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் உடைந்தன. காயமடைந்த பெருமாயி, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசா ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ