உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பரமக்குடியிலிருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை பரமக்குடியை சேர்ந்த டிரைவர் வீராசாமி ,45; ஓட்டினார் .நேற்று காலை 4.30 மணி அளவில் விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் சாலை அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.இதில் பஸ்ஸில் பயணம் செய்த மும்பை மட்டுங்க பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி,43: மானாமதுரை சேர்ந்த அஞ்சலிதேவி,38; டிரைவர் வீராசாமி மற்றும் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் முண்டியம்பாக்கம்அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்து இடர்பாடுகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து காரணமாக திருச்சி -சென்னை சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !