உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிப்., 9ல் சாலை மறியல் மா.கம்யூ., முடிவு

பிப்., 9ல் சாலை மறியல் மா.கம்யூ., முடிவு

நெய்வேலி: வி.கே.டி., சாலை மற்றும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, வரும் பிப்., 9ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த மா.கம்யூ., முடிவு செய்துள்ளது.நெய்வேலியில் மா.கம்யூ., நகர கமிட்டி கூட்டம் நடந்தது. நகர குழு உறுப்பினர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், திருஅரசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மேரி, மாதவி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். கூட்டத்தில், விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, வரும் பிப்., 9ம் தேதி மாவட்டத்தில் 7 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை