உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புத்தேரி கோவிலில்  சொர்க்க வாசல் திறப்பு

 புத்தேரி கோவிலில்  சொர்க்க வாசல் திறப்பு

திட்டக்குடி: வைகுண்ட ஏகாதசியையொட்டி, திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், 'சொர்க்க வாசல் திறப்பு' உற்சவம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை 4:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்; அதிகாலை 5:00 மணியளவில் வேத மந்திரங்கள், திவ்ய பிரபந்தம் முழங்க 'சொர்க்க வாசல் திறப்பு' உற்சவம்; மகா தீபாராதனை நடந்தது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி