உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

 சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

கடலுார்: சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ம.க.,மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடலுார் தாலுகா, குடிகாடு, தியாகவல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலுார் சிப்காட்டில் ஏற்கனேவ இயங்கி வரும் தொழிற்சாலைகளால் சுற்றுப்புற சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க அரசாணை பிறப்பித்துள்ளது மக்கள் விரோத நடவடிக்கை. சிப்காட்டிற்காக கையகப் படுத்தப்பட்ட 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களில், தொழிற்சாலை அமைக்கப்படாமல், இயங்கிய தொழிற்சாலைகளும் மூடப்பட்டு பயனில்லாமல் கிடக்கிறது. ஏற்கனவே கையகப்படுத்தி பயன்பாடில்லாமல் கிடக்கும் நிலங்களை உரியவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவும், புதிதாக நிலம் கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்யவும் வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !