மேலும் செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் 23ல் கிராம சபை கூட்டம்
13-Nov-2024
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வரும் 23ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நடைபெறாததால், வரும் 23ம் தேதி காலை 11.00 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்த வேண்டும். ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, பொதுவான இடத்தில் நடத்த வேண்டும். இதுகுறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு ஊராட்சி தலைவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.23ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, துாய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
13-Nov-2024