பெண்ணாடம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் தேவை
பெண்ணாடம் : பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பயணிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தி திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், சவுந்திரசோழபுரம், செம்பேரி, அரியராவி, மாளிகைக்கோட்டம் மற்றும் அரியலுார் மாவட்ட கிராமங்களைச் சேர்ந்தவர் தங்களின் அன்றாட தேவைக்கு திட்டக்குடி, விருத்தாசலம், கடலூர், திருச்சி, சென்னை, அரியலுார், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள், வெளியூரில் வரும் பயணிகளிடம் குடிமகன்கள் மற்றும் மர்மநபர்கள் பயணிகள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அச்சமடைகின்றனர்.எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி, பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.