ஓவிய கண்காட்சி
கடலுார்: கடலுார் வண்டிப்பாளையம் எஸ்.கே.,வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ.,பள்ளியில் ஓவிய கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் கவிதா கண்ணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழக கலாச்சார இயல்புறவியல் இயக்குனரகத்தைச் சேர்ந்த கிளமெண்ட் லுார்தஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஓவிய கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். பள்ளி துணை முதல்வர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் கைவினை மற்றும் ஓவிய கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.