மேலும் செய்திகள்
இளம்பிள்ளை ஏரியில் 1,000 பனை விதை நடல்
25-Sep-2024
விருத்தாசலம்: விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் பனை விதைகளை சேகரித்து நடுவது குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி, மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் தலா 1,000 பனை விதைகள் வீதம் வரும் 10ம் தேதி, 6 லட்சத்து 83 ஆயிரம் பனை விதைகளை நடும் விழா நடப்பதாக கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி, விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் தலைமையில் பனை விதைகள் சேகரிப்பு குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் இப்ராஹிம், மோகனாம்பாள் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., மணிகண்டன் வரவேற்றார்.அதில், சல்லி வேருடைய பனை விதைகளை நடுவதன் பயன்கள், முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும், வரும் 10ம் தேதி மாவட்டம் முழுவதும் பனை விதைகள் நடும் விழா நடக்க உள்ளதால், 51 ஊராட்களிலும் தலா 1,000 பனை விதைகளை சேகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மக்கள் நலப்பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
25-Sep-2024