பொங்கல் தொகுப்பு வேண்டாம் ஊராட்சி மக்கள் புறக்கணிப்பு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பூங்குணம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொங்கல் தொகுப்பை பெறாமல், ஊராட்சி மக்கள் புறக்கணித்தனர்.பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம், எல்.என்.புரம், பூங்குணம் ஆகிய இரு ஊராட்சிகள் பண்ருட்டி நகராட்சியுடன் இணைக்க கடந்த 2ம்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு, இரு ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முதல் அரசின் பொங்கல் தொகுப்பாக அரசி, சர்க்கரை, கரும்பு ஆகியன, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.பூங்குணம் நகர கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் 850 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கடையில் நேற்று பண்ருட்டி நகராட்சியுடன் பூங்குணம் ஊராட்சி இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதிமக்கள் பொங்கல் தொகுப்பு பெறாமல் புறக்கணித்தனர்.