உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிவசுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

சிவசுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

கடலுார் : கடலுார் புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சாமி கோவிலில், இன்று பங்குனி உத்திர திருவிழா துவங்குகிறது.அதையொட்டி, இன்று (14ம் தேதி) இரவு 7:00 மணிக்கு புற்று மண் எடுத்தல், விநாயகர் வீதியுலாவும், 15ம் தேதி காலை 6:30 மணிக்குமேல் 8:00 மணிக்குள் கொடியேற்றம், காலை சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா மற்றும் இரவு சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.19ம் தேதி உக்கிரகுமார பாண்டிய முருகன், மீனாட்சி சோமசுந்தரரிடம் பூச்செண்டு பெறுதல், 20ம் தேதி காலை சிவசுப்ரமணிய சாமி வள்ளி, தெய்வானை திருமணத்தை நடத்த திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுடன் புதுவண்டிப்பாளையம் முருகன் கோவிலுக்கு எழுந்தருளுதல் மற்றும் இரவு திருக்கல்யாணம் முடிந்து முருகன் திருப்பரங்குன்ற காட்சியில் மயில் வாகனத்தில் அம்மை, அப்பனுடன் வீதியுலா நடக்கிறது.இதையடுத்து, வரும் 23ம் தேதி காலை 6:30 மணிக்குமேல் 8:00 மணிக்குள் மேஷ வாகனத்தில் தேர் வடம் பிடித்தல் மற்றும் 26ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ