உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பங்குனி உத்திர பெருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்

பங்குனி உத்திர பெருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம், செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு, விருத்தாசலம் தீர்த்தமண்டபத்தில் எருந்தருளினர்.பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பால்காவடி, வேல் காவடி, மயில் காவடி மற்றும் பால்குடம், செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கொளஞ்சியப்பர் சுவாமிக்கு பாலபி ேஷகம் நடந்தது. முதனை விருத்தகிரிகுப்பம் சுப்ரமணியர் கோவில், குப்பநத்தம் பாலமுருகன் கோவில்களுக்கு, காலை 9:00 மணியளவில், மணிமுக்தா ஆற்றில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், இளநீர் காவடி, தாள் காவடி சுமந்து ஊர்வலமாக சென்றனர்.போக்குவரத்து மாற்றம்.விருத்தாசலம் - சேலம் சாலையோரம் கோவில் அமைத்துள்ளது. இதனால், காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் நலன் கருதி, விருத்தாசலம் - சேலம் சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை