மேலும் செய்திகள்
வடலுாரில் இரு இடங்களில் 2 பேர் சடலமாக மீட்பு
23 hour(s) ago
திருமணமான 2 மாதத்தில் பெண் 9 மாத கர்ப்பம்: மணமகன் புகார்
23 hour(s) ago
துாங்கிய பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு
23 hour(s) ago
பண்ருட்டி: குண்டும் குழியுமான பண்ருட்டி பஸ் நிலையத்தை சீரமைப்பது எப்போது என கேள்வி எழுந்துள்ளது. பண்ருட்டி பஸ் நிலையத்தில் கடலுார், விழுப்புரம் பஸ் நிறுத்தும் மார்க்கத்தில் கடைகள் கட்டும் பணி கடந்தாண்டு நவம்பரில், துவங்கியது. இந்த பணி துவங்கி ஓராண்டாகிறது. ஆனாலும் பணி விரைவாக நடைபெறவில்லை. இந்நிலையில் பஸ்நிலையத்தில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளன. மழை நீர் வெளியே செல்ல வழியில்லாமல் குட்டையாக தேங்கி சேற்றை வாரி இறைக்கிறது. தினந்தோறும் சென்னை- கும்பகோணம், தஞ்சாவூர், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், வடலுார் உள்ளிட்ட பகுதியில் இருந்து சென்னை செல்லும், 450 க்கும் மேற்பட்ட பஸ்கள் பண்ருட்டி பஸ்நிலையத்திற்கு வந்து செல்கிறன்றன. மழைநீர் குட்டையாக தேங்கி நிற்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கின்றனர். மழைநீர் நிற்கும் பகுதியில் 2 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்து சேற்றில் விழுந்து பயணிகள் காயமடைந்து வருகின்றனர். இதனை சீரமைக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago