பண்ருட்டி நகராட்சி அவசர கூட்டம்
பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் அவசரக் கூட்டம் நடந்தது. சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். துணை சேர்மன் சிவா, கமிஷனர் காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் குடியிருப் பவர் களுக்கு பட்டா வழங்க ஆட்சேபனை இல்லை என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.