மேலும் செய்திகள்
மாணவர்களுக்காக பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்
12-Sep-2025
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே 4 கிலோ மீட்டர் துாரம் நடந்தே பள்ளிக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, உரிய நேரத்தில் அரசு பஸ் இயக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள மேல கஞ்சங்கொல்லை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், சுற்றியுள்ள சிறுகாட்டூர் , ஆச்சாள்புரம், நடுகஞ்சங்கொல்லை, அல்லியூர், புத்தூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், சுமார் 4 கிலோ மீட்டர் துாரம் வரை, தங்களது புத்தக சுமைகளுடன், காலையும் மாலையும் நடந்தே சென்று கல்வி பயின்று வீடு திரும்புகின்றனர். காட்டுமன்னார்கோவிலில் இருந்து இந்த வழித்தடத்தில், அணைகரை வரை செல்லும் அரசு பஸ் காலை 7.30 மணிக்கும். மாலையில், அணைக்கரையிலிருந்து அதே வழித்தடத்தில், திரும்பும் பஸ் மாலை 3.30 க்கம் திரும்பிவிடுகிறது. இதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்சை பயன்படுத்தி பள்ளிக்கு செல்லும் வாய்ப்பை மாணவர்கள் தவற விடுகின்றனர். இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் - ஆணைக்கரை வழித்திடத்தில் இயங்கும் அரசு பஸ்சை பள்ளி நேரத்திற்கு ஏற்றார்போல் மாற்றம் செய்தாலே பள்ளி மாணவ, மாணவிகள் பஸ்சில் பள்ளிக்கு செல்லும் பெரும் வாய்ப்பை பெருவதோடு, நிம்மதியாக சென்று திரும்புவர். ஆகவே போக்குவரத்து கழக அதிகாரிகள், பள்ளி நேரத்திற்கு ஏற்றார்போல் பஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுத்து மாணவர்களின் சுமையை குறைக்க வேண்டும் என பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12-Sep-2025