உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆதரவின்றி தவிக்கும் பெற்றோர் சப் கலெக்டர் அலுவலகத்தில் அறிவிப்பு பலகை

 ஆதரவின்றி தவிக்கும் பெற்றோர் சப் கலெக்டர் அலுவலகத்தில் அறிவிப்பு பலகை

சிதம்பரம்: சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள 'பெற்றோர்கள் கவனத்திற்கு' என்ற பெயர் பலகை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலக வாயிலில், அறிவிப்பு பலகை ஒன்று வை க்கப்பட்டுள்ளது. அதில், 'பெற்றோர் கவனத்திற்கு' என்ற தலைப்பில், 'நீங்கள் உங்களது, சொத்துக்களை, பிள்ளைகளுக்கு செட்டில்மெண்ட் ஆவணமாக பதிவு செய்ய உள்ளீர்களா? அவ்வாறு பதிவு செய்யும் ஆவணங்களில் பெற்றோரது ஜீவித காலம் வரை பராமரித்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஆவணமாக பதிவு செய்யுங்கள்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில், 'அவ்வாறு நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே வரும் காலங்களில் உங்களது பிள்ளைகள் பராமரிக்கத்தவறினால், தீர்ப்பாயத்தை நாடி ஆவணத்தை ரத்து செய்ய இயலும். உங்கள் பிள்ளைகள், உங்களை பராமரிக்கவில்லையா? வசதிகளை செய்யவில்லையா? கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., தலைமையிலான, பெற்றோர் முதியோர் பராமரிப்பு தீர்ப்பாயத்தை நாடி, பிள்ளைகளிடமிருந்து பராமரிப்பு/பாதுகாப்பு வழிவகை தெரிந்துகொள்ளுங்கள். மேலும் முதியோர் உதவிக்கு 14567 என்ற எண்ணை தொடர்புகொள்ளுங்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை