ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி தேவை
மந்தாரக்குப்பம்: நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர். கடலுார்-திருச்சி, கடலுார்-சேலம் ரயில் மார்க்கத்தில் நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இவ்வழியாக தினசரி கடலுார்-திருச்சி, காரைக்கால்-பெங்களூரு, கடலுார்-சேலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் வந்த செல்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, வாகனங்கள் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.