உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அமைதி பேச்சுவார்த்தையில் சுமூகம்: உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

 அமைதி பேச்சுவார்த்தையில் சுமூகம்: உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

ஸ்ரீமுஷ்ணம்: அமைதி பேச்சுவார்த்தையில் கால்வாய் பணிகளை விரைவில் முடிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் 14 மாதங்களுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்து வந்தது. இதனால் பொதுமக்கள்,வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஸ்ரீமுஷ்ணம் நகர வர்த்தக நல சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்தும் பணிகள் விரைவுப்படுத்தப்படவில்லை. இது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டது. இதனைதொடர்ந்து திருமுட்டம் நகர வளர்ச்சி சங்கம் சார்பில் பணிகள் முடியும் வரை இன்று 16ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா அலுவலகத்தில் போராட்டக்குழுவினருடன் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் இளஞ்சூரியன் தலைமை தாங்கினார். நகர வளர்ச்சி சங்கதலைவர் சிவானந்தம், செயலாளர் பூவராகமூர்த்தி, பொருளாளர் சடகோபன், காட்டுமன்னார்கோவில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர் விமல், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரா, அண்ணாமலை பங்கேற்றனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் பணிகள் வரும் ஜனவரி மாதம் 10 தேதிக்குள் முடிப்பதாக அதிகாரிகள் உத்திரவாதம் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்குழுவினர் அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை