உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

 கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

கடலுார்: கூழாங்கற்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். ரெட்டிச்சாவடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் புதுபூஞ்சோலைக்குப்பம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் நந்தகோபால், 38; தனது வீட்டின் அருகே கூழாங்கற்களை சட்ட விரோதமாக விற்பதற்காக டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தார். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிந்து நந்தகோபாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை