விளக்கு எரியாததால் மக்கள் அச்சம்
கடலுார்: கம்மாபுரம் அடுத்த மேலக்குப்பம் கிராமத்தில் தெருவிளக்குகள் எரியாததால், சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கும் அவலம் உள்ளது.கம்மாபுரம் அடுத்த மேலக்குப்பம் கிராமத்தில் கடந்த நான்கு மாதங்களாக தெருமின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. முதியோர், பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைகின்றனர்.எனவே, பழுதடைந்த விளக்குகளை சீரமைக்கவும், தேவைப்படும் இடங்களில் புதிய தெருவிளக்குகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.