உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் அவதி

 தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் அவதி

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில், தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங் களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோடு, கடைத்தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி சாலைகளில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங் கள் சாலையை ஆக்கிரமித்து தாறுமாறாக நிறுத்தி வைத்துள்ளனர். சென்னை, கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பஸ்கள் சேத்தியாதோப்பிற்குள் சென்று வருகிறது. சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களால் பஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், பைக் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவ திக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து போக்குவரத்து போலீசார் சேத்தியாதோப்பு பகுதியில் ஆய்வு செய்து, தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்