மேலும் செய்திகள்
புரட்டாசி மாதம் எதிரொலி இறைச்சி கடைகள் 'வெறிச்'
22-Sep-2025
கடலுார்; புரட்டாசி நான்காம் சனிக்கிழமை முடிந்த நிலையில், கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பதால், பொதுமக்கள் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்த்து விரதம் இருந்தனர். இதன் காரணமாக மீன்கள், இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமாக இருந்தது. நேற்று முன்தினம் புரட்டாசி நான்காம் சனிக் கிழமை முடிந்தது. இதன் காரணமாக கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நேற்று அதிகளவில் காணப்பட்டன. விற்பனை களைகட்டியது. ஒரு கிலோ வஞ்சிரம் 900 ரூபாய், இறால் 300 முதல், 750, பாறை மீன் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. இதே போன்று இறைச்சி கடைகளிலும் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
22-Sep-2025