உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கொசுக்கடியால் மக்கள் அவதி

 கொசுக்கடியால் மக்கள் அவதி

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் மக்கள் கொசுக்கடியால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேத்தியத்தோப்பு பேரூராட்சியில் மொத்தம், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வார்டுகளில் உள்ள தெருக்களில் மழைநீர் வடிகால் போதிய அளவு இல்லாததால் ஆங்காங்கே தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கொசுக்கடியால் ஏற்படும் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவ வழி வகை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த காலங்களில் மழைக்காலம் துவங்கினால் அடிக்கடி கொசு மருந்து அடிப்பது வழக்கம். ஊனல் தற்போது, கண்டுகொள்ளாமல், கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறோம். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !