மக்கள் குறை தீர்வு முகாம்
வேப்பூர் : வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோகத் திட்ட மக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு, வேப்பூர் வட்ட வழங்கல் அலுவலர் விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜூ முகாமை துவக்கி வைத்தார். வருவாய் ஆய்வாளர் சந்திர பிரசாத், இளநிலை வருவாய் ஆய்வாளர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், பெயர் சேர்த்தல், மொபைல் எண் சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன.