மேலும் செய்திகள்
மயானத்திற்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டுகோள்
30-Oct-2024
கடலுார்; மயானத்திற்கு பாதை அமைத்துத்தரக்கோரி, நத்தப்பட்டு பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கடலுார் அடுத்த நத்தப்பட்டை சேர்ந்த ராஜேந்திரன் தலைமையில் கொடுத்துள்ள மனு;எங்கள் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு பாதை அமைத்துக் கொடுக்க இரண்டு முறை கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 4ம் தேதி இறந்த பெண் சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்றபோது, அங்குள்ள நில உரிமையாளர் தங்கள் நிலத்தின் மீது கொண்டு செல்லக்கூடாது என தடுத்தார். இதனால், இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.எனவே, மயானத்திற்கு பாதை அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
30-Oct-2024