| ADDED : ஜன 31, 2024 02:20 AM
சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத அதிநவீன பி.எஸ் 6 இன்ஜின் பொருத்திய பஸ்கள், தலா ரூ.38 லட்சம் மதிப்பில் 100 பஸ்களை அரசு கொள்முதல் செய்தது. அதில், 40 பஸ்கள் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதில், கடலுார் மாவட்டத்திற்கு 11 பஸ்கள் கிடைத்தன.புதிய பஸ்கள் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிக்கு தலா ஒன்று ஒதுக்கப்பட்டது. புதிய பஸ்களை அவர்கள் தங்கள் தொகுதியில் விழா எடுத்து புதிய வழித்தடத்தில், கொடியசைத்து இயக்கி வைத்தனர். ஆனால், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு பஸ் கூட ஒதுக்கப்படவில்லை.கடலுார் மாவட்டத்தில் 9 எம்.எல்.ஏ.,க்களில் அ.தி.மு.க.,வை சேர்ந்த இருவர் உள்ளனர். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், புதிய பஸ்களை அவர்களுக்கு வழங்காமல் புறக்கணித்துள்ளனர். இதனால், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அவர்களது தொகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் இயக்கப்பட்ட புதிய நவீன பஸ்களில், ஒரு எம்.எல்.ஏ., விட்ட வழித்தடம் மட்டும் ஏற்றதாக உள்ளன. மற்ற எம்.எல்.ஏ.,க்கள் விட்ட கிராம வழித்தடத்தில் பஸ்சை இயக்கினால் விரைவில் பழுதாகிவிடும் என்பதால், அதிகாரிகளும் குழப்பமான மனநிலையில் இருந்து வருகின்றனர்.