பெரியார் கலைக்கல்லுாரி பரிசளிப்பு விழா
கடலுார்: கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் தமிழக அரசு உயர் கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா போட்டி நடந்தது. இதில் கவிதை, சிறுகதை, பேச்சு, தனி நடனம், குழு நடனம், தற்காப்பு கலை என, 30 தலைப்புகளில் போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில் பொருளியல் துறை தலைவர் ராமகிருஷ்ணன் சாந்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கவிஞர் அறிவுமதி பங்கேற்று, போட்டியில் வென்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் கீதா வாழ்த்தி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை இணை ஒருங்கிணைப்பாளர் ராஜா செய்திருந்தார். கலை திருவிழா ஒருங்கிணைப்பாளர் குமணன் நன்றி கூறினார்.