ரயில்வே கேட் அமைக்க மனு
விருத்தாசலம் : சேலம் மார்க்கத்தில், இலங்கியனுார் - பிஞ்சனுார் இடையே ஆளில்லா ரயில்வே கேட்டில், கேட் அமைக்க கோரி மனு அளிக்கப்பட்டது. தெற்கு ரயில்வே திருச்சி முதுநிலை கோட்ட மேலாளர் ரமேஷிடம், மக்கள் நீதி மய்யம் விருத்தாசலம் நகர அமைப்பாளர் வெங்கடகிருஷ்ணன் அளித்த மனு: விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பயணிகள் மற்றும் பார்சல் புக்கிங் வாயிலாக பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. எனவே, பயணிகள் நலன் கருதி வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சஃபார் சிறப்பு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் - சேலம் மார்க்கத்தில், இலங்கியனுார் - பிஞ்சனுார் ஆளில்லா ரயில்வே கேட்டில், கேட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.