மேலும் செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு
01-Nov-2024
கடலுார், : கோவில் பூட்டப்பட்டதை திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.நெய்வேலி வட்டம் 20 பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் தலைமையில் கொடுத்துள்ள மனு;எங்கள் குலதெய்வம் பத்ரகாளியம்மன் கோவில் முத்தாண்டிக்குப்பத்தில் அமைந்துள்ளது. நுாறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய், நகை, வெள்ளி பொருட்கள் வருமானமாக வருகிறது. இதற்கான கணக்கு சரியாக பராமரிக்காததால், பிரச்னை இருந்து வருகிறது. இதனால், ஒரு தரப்பினர் கோவிலை பூட்டிவிட்டனர்.எனவே, குலதெய்வ கோவிலை திறப்பதற்கும், தற்போதுள்ள பூசாரி பூஜை செய்வதற்கு 6 மாதம் உள்ளதால், அதன் பிறகு அடுத்தவர்களிடம் பூஜைக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
01-Nov-2024